For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை சந்திக்கும் 151 எம்பி, எம்.எல்.ஏக்கள்..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

As many as 151 MPs are facing criminal cases against women.
02:27 PM Aug 22, 2024 IST | Chella
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை சந்திக்கும் 151 எம்பி  எம் எல் ஏக்கள்     வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை 151 எம்பிக்கள் எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

Advertisement

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் போது தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட 4,809 எம்பிக்கள், எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்களில் 4,693 ஆய்வு செய்யப்பட்டது. அதில், 16 எம்பிக்கள் மற்றும் 135 எம்எல்ஏக்கள் என 151 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்கை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 25 சிட்டிங் எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் 21 பேரும், ஒடிசா மாநிலத்தில் 17 பேரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், இரண்டு எம்பிக்கள், 14 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பிரிவு 376ன் கீழ் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு உள்ளவர்களில் பாஜகவைச் சேர்ந்தவர்களே (54 எம்பி, எம்எல்ஏக்கள்) அதிகம் உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சி (23) இரண்டாவது இடத்திலும், தெலுங்கு தேசம் (17) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Read More : ஆடுகளை வளர்த்து லட்சாதிபதி ஆகலாம்..!! அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..? ரூ.1 கோடி வரை..!!

Tags :
Advertisement