“அப்பா, என்ன தொடாத பா” கெஞ்சிய 15 வயது மகள், போதையில் தந்தை செய்த கொடூரம்!!
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில், சொந்த தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், சார்லஸ் என்ற நபர் ஒருவர் அவரது மனைவி இன்பத்தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இந்த நிலையில், தினமும் குடித்து விட்டு வரும் சார்லஸ், தனது மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்க்கு வந்துள்ளார். பின்னர் மது போதையில், அவர் தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, சம்பவம் குறித்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் கோகிலா, பாலியல் தொல்லை கொடுத்த சார்லஸ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியே தந்தையே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர்களை பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெளியே அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் அடைகின்றனர்.
Read more: அண்ணா நகரில் அதிரடி காட்டிய போலீஸ்..!! மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பெண் கைது..!!