15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! அதிமுக கவுன்சிலர் ஜாமீன் ரத்து.! உயர் நீதிமன்றம் அதிரடி.!
பரமக்குடியில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சித் தலைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
பரமக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புது மலர் பிரபாகர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான விசாரணையில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு தீவிரமானது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகர் மற்றும் சிகாமணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்தார் .
English Summary: paramakudi 15 year rape case high court cancel the bail of tamil maravar senai chief bail petition and cancel the bail of admk counsellor.