For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தான் : மின் தூக்கி செயலிழந்து தாமிர சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட 15 பேர் மீட்பு.. ஒருவர் பலி!

01:20 PM May 15, 2024 IST | Mari Thangam
ராஜஸ்தான்   மின் தூக்கி செயலிழந்து தாமிர சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட 15 பேர் மீட்பு   ஒருவர் பலி
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் மின் தூக்கி செயலிழந்து சுரங்கத்திற்குள் சிக்கிய 14 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 108 கிமீ தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கெத்ரி பகுதியில் உள்ள தாமிரச் சுரங்கம் 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவிலிருந்து வந்த லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள், சுரங்க அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேற்று இரவு இச்சுரங்கத்திற்கு சென்றுள்ளனர்.

அரசு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுடன் விஜிலென்ஸ் குழுவினர் 15 பேர் ஆய்வுக்காக சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் மேலே வர முற்பட்டபோது, ​​கூண்டு வைத்திருந்த கயிறு அறுந்து விழுந்து, பல நூறு அடி ஆழத்தில் பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

மாநில பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அனைவருக்கும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஜெய்ப்பூரிலுள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement