For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கனமழையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு... 13 கால்நடை மரணம்...!

05:20 AM May 24, 2024 IST | Vignesh
கனமழையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு    13 கால்நடை மரணம்
Advertisement

கனமழையின் காரணமாக தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக 16.05.2024 முதல் 22.05.2024 முடிய மொத்தம் 15 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 40 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில், ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 136 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். நீரில் மூழ்கிய பயிர்கள் 4,385.40 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர், சோளம், பருப்பு, எள்ளு, கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய வேளான் பயிர்கள் மழை நீரில் மூழ்க்கியுள்ளன.

Advertisement

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதாலும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பொதுமக்கள். சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல். கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி கைப்பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் 18.05.2024 முதல் 20.05.2024 வரை எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள். கன்னியாகுமரி, கோயம்புத்தூர். திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு 24.05.2024 முடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்றும் பொது மக்களது பாதுகாப்பு கருதி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement