ரூ.15 லட்சம் வரை கடன்..!! இவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதரா மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய உதவி செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் தனிநபர் மற்றும் குழுக்கடன்கள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் மகளிர், ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் மற்றும் வணத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கடனாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி 6% என்றும், திரும்ப செலுத்தும் காலம் இரண்டை ஆண்டுகள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Read More : மாணவர்களே..!! பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை கவனிச்சீங்களா..? செப்.20ஆம் தேதி முதல் ஆரம்பம்..!!