முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கஞ்சாவுடன் சிக்கிய சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! கோர்ட் அதிரடி..

05:39 PM May 08, 2024 IST | Mari Thangam
Advertisement

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூட்டியுபர் சவுக்கு சங்கரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார்.

இந்த வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியிடம், கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும்,  கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் சவுக்கு சங்கர் கூறினார்.  தனது பாதுகாப்பிற்காக மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.  அதற்கு பதிலளித்த நீதிபதி, வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.  ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மே 22 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை செய்ய நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் வலது கையில் கட்டு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags :
court custodyganja smugling casesavukku sankar
Advertisement
Next Article