முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரே நாளில் ரூ.14,000 கோடி..!! 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனை..!! களைகட்டிய அட்சய திருதியை..!!

04:45 PM May 11, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் நேற்று (மே 10) ஒரே நாளில் அட்சய திருதியை முன்னிட்டு சுமார் 20 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதன் தோராய மதிப்பு சுமார் 14,000 கோடி ரூபாய் ஆகும். கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் வியாபாரம் களைக்கட்ட துவங்கியது. பலரும் நேற்று டெலிவரி எடுத்துக் கொள்ளும் வகையில் 10 நாட்களுக்கு முன்பிருந்தே 10 சதவீதம் முன்பணம் செலுத்தி வந்தனர். அட்சய திருதியை முன்னிட்டு, தங்கத்தின் எடைக்கு எடை வெள்ளி இலவசம், சிறப்பு தள்ளுபடி, செய்கூலியில் தள்ளுபடி என்று விதவிதமான வியாபார யுக்திகளுடன் நகைக்கடைகள் இல்லத்தரசிகளை தங்கள் கடைகளுக்கு வர வைத்தன.

பொதுமக்கள் அதிகளவில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டியதால், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை தங்கம் விலை உயர்ந்தது. அட்சய திருதியை ஆராவாரம் முடிந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைய துவங்கியுள்ளது.

Read More : விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருது.!! மரியாதை செலுத்திய பிரேமலதா..!!

Advertisement
Next Article