முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கழிவறைக்குள்..." நடுவானில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்.! விமான பணியாளரின் கேவலமான செயல்.!

12:45 PM Dec 03, 2023 IST | 1newsnationuser4
Advertisement

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் செல்போன் வைத்து 14 வயது ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குறித்த ஏர்லைன்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

அமெரிக்காவின் சார்லட் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்துவதற்காக சென்றிருக்கிறார். அப்போது கழிவறையில் ஐபோன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த சிறுமி அதிர்ச்சியடைந்து இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக விமான பணியாளர்களிடம் புகார் தெரிவித்தனர். அந்த விமானத்தில் இருந்த ஆண் பணியாளர் ஒருவர் சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுப்பதற்கு அவரது செல்போனை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை அழிக்கும் படி சிறுமியின் பெற்றோர் விமான பணியாளர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் விமான நிர்வாகம் குறித்த நபர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

Tags :
14 yr old girlaeroplaneAir HostesscomplaintFilmed
Advertisement
Next Article