ஆசிரியர் மேல் சுருண்டு விழுந்த 14 வயது மாணவன் மரணம்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் யோகேஷ் சிங். சம்பவம் நடந்த தினத்தன்று வகுப்பறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த மாணவன் திடீரென ஆசிரியர் மீது மயங்கி விழுந்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனுக்கு திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட் அவனது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து வெளியான போஸ்ட்மார்ட்டம் அறிக்கையிலும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 14 வயது மாணவன் வகுப்பறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.