இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது...!
இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகளும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வந்தனர். இந்த சூழலை பயன்படுத்து அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படை நாள்தோறும் ரோந்து சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகுகள் பறிமுதல். ஜலசந்தி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையின் Rani Durgavati கப்பல், கோடியக்கரையிலிருந்து 24 கி.மீ தொலைவில், இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கையை சேர்ந்த ஐந்து படகுகளை சுற்றிவளைத்தது. மீன்பிடி படகுகளிலிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். படகுகள் மற்றும் மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.