For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

14 பேர் பலி!… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்!… குண்டுமழையால் சிதறும் காசா!…

08:44 AM Dec 02, 2023 IST | 1newsnationuser3
14 பேர் பலி … மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல் … குண்டுமழையால் சிதறும் காசா …
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தெற்கு காசா பகுதியில் தீவிர வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் துவங்கியது.

Advertisement

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த அக்., 7ல் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராதது, உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு பேச்சு நடத்தியதை தொடர்ந்து, கடந்த மாதம் 24 முதல், நான்கு நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இந்த போர் நிறுத்தத்தின் போது, ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 240 பிணைக் கைதிகளில், 100 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள். பதிலுக்கு, 240 பாலஸ்தீன சிறை கைதிகளை இஸ்ரேல் அரசு விடுவித்தது. முதலில் நான்கு நாட்கள் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம், கத்தார் மற்றும் எகிப்தின் வலியுறுத்தலை தொடர்ந்து மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

நேற்று காலை 7:00 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதை நீட்டிக்க பல்வேறு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. காலை 7:00 மணிக்கு பின், தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில், இஸ்ரேல் ராணுவம் விமானம் வாயிலாக துண்டு பிரசுரங்களை போட்டது. கான் யூனிஸ் நகர் மிகப் பெரிய போர் பகுதியாக மாற உள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டது. சில மணி நேரங்களில், விமானம் வாயிலாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை துவங்கியது. ஹமாத் சிட்டி பகுதியில் உள்ள மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு தகர்க்கப்பட்டது. இதில், 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் ஹமாஸ் சுகாதாரத்துறை தெரிவித்தது. ஹமாஸ் தரப்பும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Tags :
Advertisement