ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தில் 14 பேர் பலி!. செர்பியாவில் சோகம்!
Roof Collapse: செர்பியாவின் நோவி சாட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் வெளிப்புற கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர். அப்போது திடீரென ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் கூறியதாவது, இதுவரை எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, எட்டு பேர் இறந்துள்ளனர் . இரண்டு பேர் மருத்துவமனையில் உள்ளனர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் கூறினார். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிக்கியுள்ள இருவருடன் மீட்புக் குழுவினர் தொடர்பில் இருப்பதாக அமைச்சர் கூறினார். மேலும், கனரக இயந்திரங்களின் உதவியுடன் 80-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
செர்பியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள இந்த ரயில் நிலையம், மூன்று வருட சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. நிலையத்தின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று செர்பியாவின் பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறினார். “கட்டுமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களைக் கண்டறிய நாங்கள் வலியுறுத்துவோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Readmore: பண்டிகை சீசன்!. அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு!. ரூ.1.87 லட்சம் கோடி வசூல்!.