நிர்வாணமாக 14 நாட்கள்!… நடிகரின் விசித்திர வழக்கம்!… வைரலாகும் புகைப்படங்கள்!
இமயமலையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக 14 நாட்களை கழித்த அஞ்சான் பட நடிகர் வித்யூத் ஜமாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் நண்பனாக(சந்துரு) கதாபாத்திரத்தில் நடித்திருந்த வித்யூத் ஜமால், விஜய்யின் துப்பாக்கி உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்து பிரபலமானார். இவர், இமயமலையில் ஒரு துறவியைபோல ஆடையில்லாமல் இருந்துள்ளார். 43 வயதாகும் இவர், ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.
இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைப்பது, நதியில் இறங்கி குளிப்பது உள்ளிட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் வித்யூத் ஜமால் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் சமீபத்தில் நடித்த க்ராக் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.