மகிழ்ச்சி...! மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு...!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு. 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு. சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு. 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு. ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநிர் விநியோகம் செய்யப்படும். ரூ.1,517 கோடி மதிப்பீட்டில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை. வடசென்னையை மேம்படுத்த ரூ.1,946 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.