முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

1300 ஆண்டுகள் பழமையான துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்.. தஞ்சை மக்களின் பெருமை.. இவ்வளவு சிறப்புகளா..?

1300 year old Dukachi Apadsakayeswarar temple.. so special..?
06:00 AM Dec 31, 2024 IST | Mari Thangam
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தொடர்ந்து குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோயில் புணரமைத்தாக கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் கலை நயமிக்க, அழகிய சிலைகள் அமைந்துள்ளது.

Advertisement

இக்கோயில் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி என்ற தலமானது காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதைப் போல, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் விளங்கும் இக்கோயில் அதற்கு இணையாக தென் திருக்காளத்தியாக விளங்குவதும் சிறப்பு.

கோயில் அமைப்பு : அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழும் இக்கோயில் அன்று ஏழு திருச்சுற்றுகளுடன் இருந்ததாகவும் தற்போது மூன்று திருச்சுற்றுகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு கருவறை மூலவர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் அம்பாள் ஸ்ரீ செளந்தரநாயகி. இருவரும் பக்தர்கள் வேண்டும் மகத்தான பலன்களைத் தரும் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர். இங்குள்ள சரபேசுவரர் சன்னதி கும்பகோணம் வட்டத்திலுள்ள சரபேசுவரர் சன்னதிகளில் முதலாவது என்ற பெருமையும் சிறப்பானது.

சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளும் ஒன்று சேர்ந்த சக்தியான ஸ்ரீசிவதுர்க்கையம்மன் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்த போது தன்னுடைய சக்தியான பார்வதியை "சௌந்தரமாக வா" என சிவபெருமான் அழைக்க பார்வதி  அழகிய சொரூபமாக வெளிப்பட்டதால் இத்தல இறைவிக்கு சௌந்தர்ய நாயகி (சௌந்தரம் என்றால் அழகு) எனப்பெயர் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இக்கோயிலில் எந்த ஆண்டு இறுதியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது என தெரியாமல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலை கிராமமக்கள் முயற்சியாலும், இந்து சமய அறநிலையத்துறையாலும் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு செப். 3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக  யுனெஸ்கோ ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு சிறப்பு விருதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Read more ; “நான் மதம் மாற இதான் காரணம்” பிரபல நடிகை கூறிய காரணம்…

Tags :
தஞ்சைதுக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
Advertisement
Next Article