முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே எச்சரிக்கை!! செல்போனைப் பார்த்து, 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது அண்ணன்..

13 years old brother sexually abused his own sister
06:17 PM Jan 20, 2025 IST | Saranya
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 13 வயதான மகனும், 5 வயதான மகளும் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து, அந்தப் பெண் தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் வருமானத்திற்காக நாகர்கோவிலில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். காலையில் வீட்டை விட்டு செல்லும் இவர், மாலையில் தான் வீடு திரும்புவார்.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இவர் மாலையில் வீட்டிற்க்கு வரும்போதெல்லாம், இவரது 5 வயது மகள் அழுது கொண்டே இருந்துள்ளார். இது குறித்து அவர் தனது மகளிடம் விசாரித்த போது, சிறுமி எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக தனது 5 வயது மகள் அழுததால் சந்தேகம் அடைந்த தாய், அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான், தனது 13 வயது மகன், 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. ஆனால் 5 வயது சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், தினமும் அழுதபடி இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து உடனடியாக குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் 5 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது அண்ணனை போக்சோவில் கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரனையில், சோஷியல் மீடியாவில் ஆபாச காட்சிகள், ஆபாச படங்களை பார்த்து, தனது சொந்த தங்கையிடமே இது போன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Read more: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..!! எத்தனை வேட்பாளர்கள் போட்டி..? சுயேட்சையே இத்தனை பேரா..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட்..!!

Tags :
brothersexual abuseSister
Advertisement
Next Article