For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

13 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.! 1 வாரம் தொடர் வன்புணர்வு.! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி.!

11:16 AM Nov 29, 2023 IST | 1newsnationuser4
13 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்   1 வாரம் தொடர் வன்புணர்வு   காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி
Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஹைதராபாத்தில் பல்லியா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நவம்பர் 18ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி மணியார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிறுமியை விட்டனர்.

இது தொடர்பாக சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுமியை கடத்தி ஒரு வார காலமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி கடத்தப்பட்டு ஒரு வார காலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் நாட்டில் அதிகரித்து வருவது பெற்றோர்களை அச்சமடைய செய்திருக்கிறது.

Tags :
Advertisement