அடக்கொடுமையே: 13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்.! மணமகன் உட்பட 111 பேர் மீது வழக்கு.!
உத்திரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உட்பட 111 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் உண்ணாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பெண் தனது காதலனுடன் ஓடியதை தொடர்ந்து அந்தப் பெண்ணின் இளம் சகோதரியான 13 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி மணமகன் வீட்டார் கட்டாயப்படுத்தி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பெண் வீட்டாரும் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 22 வயது மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பெற்றோரின் வற்புறுத்துதலின் பேரில் 13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற இருந்தது. இந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்கள் அமைப்பு திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு வந்து திருமணத்தை நிறுத்தியது.
மேலும் இது தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளித்தனர். இவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகன் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணம் நடத்தி வைக்க வந்த மதகுரு மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 111 பேர் மீது குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.