கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்..!! 16 பேர் மாயம்!! 13 இந்தியர்களின் நிலமை என்ன?
ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமாகி உள்ளனர்.. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் துறைமுக நகரமான டுக்ம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் எண்ணெய் கசிவு குறிந்த எந்த தகவலும் உறுதி இன்னும் செய்யப்படாமல் உள்ளது. இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர்.
டுக்ம் துறைமுகம் ஓமானின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது, சுல்தானட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களுக்கு அருகில் உள்ளது, இதில் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது, இது டுக்மின் பரந்த தொழில்துறை மண்டலத்தின் ஒரு பகுதியாகும், இது ஓமானின் மிகப்பெரிய ஒற்றை பொருளாதார திட்டமாகும்.
Read more ; Aadi 2024 : ஆடி முதல் நாள்.. கலசம் வைத்து அம்மனை வணங்குவது எப்படி?