இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!! லிஸ்ட் இதோ..!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி மின்னலுடனும் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளைய தினம் (ஆகஸ்ட் 21) கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரும் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : வீட்டிலிருந்து மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!