விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு இனி ரூ.12,000 வரப்போகுது..!! போனஸ் கூட இருக்காம்..!! பிரதமர் மோடி அறிவிப்பு..!!
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை மோடி அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் விவசாயிகளுக்கு ஒரேயடியாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது
ஆண்டுக்கு 3 தவணைகளில் பிரதமர் கிசான் நிதி ரூ. 2 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்து வருகின்றன. பிஎம் கிசான் திட்டத்திற்கு கூடுதலாக சில மாநில திட்டங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிதி ஒவ்வொரு மாநிலத்திலும் அளவு வேறுபட்டாலும் பணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தில் மட்டும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மாநில அரசின் பங்களிப்புடன் இனி ரூ.12,000ஆக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கே கொள்முதல் செய்யப்படும் என்றும், விவசாயிகளுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.