நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி...! அரசு மாஸ் அறிவிப்பு..!
நடப்பு ஆண்டு முதல் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவில் பேசிய அவர்; இந்த அரசு மாநில நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவை பேணி வருகிறது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாநில பிரிப்பு சார்ந்து சாதகமான பலன்கள் கிடைக்கும் என அரசு நம்புகிறது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து இந்த அரசு அறியும். அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும்.
விவசாயிகளின் நலனை காக்கும் கடமையை இந்த அரசு கொண்டுள்ளது. ரைத்து பரோசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15,000 நிதியுதவி விரைவில் வழங்கப்படும். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது என்றார்.
தெலுங்கானா மாநில அரசால் பல்வேறு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆரோக்கிய லட்சுமி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா ஆரோக்கிய லட்சுமி திட்டத்தின் கீழ், மாநில அரசாங்கத்தால் மாநில குடிமக்களுக்கு உதவி மற்றும் பலன்கள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், மாநில மக்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நிதி உதவி வழங்கப்படும் என்ற திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.