For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

12 மனைவிகள்.. 102 குழந்தைகள்.. 578 பேரக்குழந்தைகள்.. உலகின் மிகப்பெரிய குடும்பத்துடன் வாழும் நபர்..!

He lives with the world's largest family, with 12 wives, 102 children, and 578 grandchildren.
09:08 AM Dec 30, 2024 IST | Rupa
12 மனைவிகள்   102 குழந்தைகள்   578 பேரக்குழந்தைகள்   உலகின் மிகப்பெரிய குடும்பத்துடன் வாழும் நபர்
Advertisement

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல சுவாரஸ்ய தகவல்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கிழக்கு உகாண்டாவில் உள்ள முகிசா கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான மூசா ஹசாஹ்யா கசேரா என்ற நபரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம். இவர் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள் என உலகின் மிகப்பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

தனது குழந்தைகளின் பெயர்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள சிரமப்பட்ட அவர் ஒரு பதிவேட்டை பராமரித்து வருகிறார்.. மேலும் தனது மிகப்பெரிய குடும்பத்தை வழிநடத்துவதில் தான் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை குறித்து அவர் பேசி உள்ளார். தனது குடும்பத்தினர் அனைவருக்கும் போதுமான உணவு மற்றும் வளங்களை வழங்குவது தனக்கு கடினமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூசா ஒவ்வொரு மனைவிக்கும் சராசரியாக 8 - 9 குழந்தைகள் உள்ளனர். இதன் மூலம் அவரின் குடும்பம் படிப்படியாக வளர்ந்துள்ளது. தனது குடும்பத்தில் சிலருக்கு மட்டுமே அவர் அடிப்படை கல்வியை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “எனது முதல் மற்றும் கடைசி குழந்தையைத் தவிர, எனது மற்ற குழந்தைகளின் பெயர்களை நினைவில் கொள்வது கடினம்; அவர்களை அடையாளம் காண எனக்கு உதவுவது தாய்மார்கள் தான்,” என்று தெரிவித்தார்..

1972 இல் 17 வயதாக இருந்தபோது மூசா முதல் திருமணம் செய்தார். பின்னர் அவர் 12 பெண்களை ஒருவர் பின் ஒருவராக திருமணம் செய்து கொண்டார். "முதலில் இது ஒரு நகைச்சுவையாக இருந்தது ... ஆனால் இப்போது பல சிக்கல்கள் உள்ளன." என்று தெரிவித்தார்.

தனது குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களை வளர்ப்பது எவ்வளவு சவாலானதாக இருக்கும் என்பதை ஒருபோது தான் கணிக்கவில்லை என்பதையும் மூசா ஒப்புக்கொண்டார்.

மேலும் “ எனது உடல்நிலை சரியில்லாமல் போனது, இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு வெறும் இரண்டு ஏக்கர் நிலம் இருப்பதால், எனது இரண்டு மனைவிகள் உணவு, கல்வி, உடை போன்ற அடிப்படை வசதிகளை என்னால் வாங்க முடியவில்லை." என்று கூறினார்.

பிள்ளைகள் பெருகிக் கொண்டே வந்த நிலையில், இறுதியில் கர்ப்பத்தைத் தடுக்க தனது மனைவிகளுக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கத் தொடங்கினார். அதன்பின்னரே குழந்தை பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

மூசாவின் குழந்தைகளின் வயது 10 முதல் 50 வரை இருக்கும், அதே நேரத்தில் அவரது இளைய மனைவி நாற்பது வயதுக்கு குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உகாண்டா 1995 இல் குழந்தை திருமணத்தை தடை செய்தது, ஆனால் பலதார மணம் சட்டப்பூர்வமாக உள்ளது, குறிப்பிட்ட மத மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் கீழ் ஆண்கள் பல மனைவிகளை திருமணம் செய்து கொள்ள முடியும்.

மூசா ஹசாஹ்யா வசிக்கும் புகிசாவின் கிராமத்தின் முதன்மை தொழிலாக விவசாயம் உள்ளது. பிரதான பயிர்களான மரவள்ளிக்கிழங்கு, அரிசி, மக்காச்சோளம் மற்றும் காபி போன்றவற்றை பயிரிடுகிறது, மேலும் கால்நடை வளர்ப்பும் அங்கு பிரதான தொழிலாக இருக்கிறது.

மூசாவின் மனைவிகளும், வளர்ந்த குழந்தைகளும் குடும்பத்தை ஆதரிப்பதற்காக பெரும்பாலும் பல வேலைகளை செய்கின்றனர். தண்ணீர் எடுப்பது, விறகு சேகரிப்பது, அண்டை வீட்டாருக்கு உதவுவது உள்ளிட்ட பிற வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற பணிகள் இதில் அடங்கும். ஆனால் அதே நேரம் ஆண்கள் பொதுவாக குடும்ப வளாகத்தில் நேரத்தை செலவிடுகிறார்கள், மரங்களுக்கு அடியில் அமர்ந்து சீட்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Read More : மனைவியை வாடகைக்கு எடுக்கும் ஆண்கள்.. அரசு முத்திரை தாளில் ஒப்பந்தம்..!! இந்தியாவில் இப்படி ஒரு இடமா..?

Tags :
Advertisement