அதிரடி நடவடிக்கை...! காவல்துறை நடத்திய என்கவுன்டரில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை...!
மகாராஷ்டிராவில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் உள்ள வண்டோலி கிராமத்தில் இந்த என்கவுன்டர் நடந்தது. கட்சிரோலி காவல்துறையின் கூற்றுப்படி, வண்டோலி கிராமத்திற்கு அருகே 12 முதல் 15 மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 10 மணியளவில் நடவடிக்கை தொடங்கப்பட்டது. காவல்துறையின் C-60 பிரிவின் கமாண்டோக்கள் மற்றும் பிற மாவட்ட காவல்துறை பணியாளர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன.
தேடுதல் வேட்டையின்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்ட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடந்த 17-ம் தேதி மதியம் காவல்துறை தொடங்கிய பதிலடி தாக்குதல் 6 மணி நேரம் வரை நீடித்தது. இந்த என்கவுன்ட்டரில் 5 பெண் நக்சலைட்கள் உட்பட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களது தலைக்கு மகாராஷ்டிர அரசு ரூ.86 லட்சம் பரிசு அறிவித்திருந்தது என மாவட்ட எஸ்பி நீலோத்பால் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தரேம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி, சத்தீஸ்கர் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.