For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரஷ்யா - உக்ரைன் மோதலில் 12 இந்தியர்கள் கொலை!. 16 பேர் மாயம்!. எஞ்சியவர்களை முன்கூட்டியே அனுப்புங்கள்!. வெளியுறவுத் துறை அமைச்சகம்!

12 Indians killed in Russia-Ukraine conflict!. 16 missing!. Send the rest early!. Ministry of External Affairs!
06:50 AM Jan 18, 2025 IST | Kokila
ரஷ்யா   உக்ரைன் மோதலில் 12 இந்தியர்கள் கொலை   16 பேர் மாயம்   எஞ்சியவர்களை முன்கூட்டியே அனுப்புங்கள்   வெளியுறவுத் துறை அமைச்சகம்
Advertisement

Russia-Ukraine conflict: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் இந்தியர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 12 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டனர். மேலும் 16 பேரைக் காணவில்லை. அண்மையில் ரஷ்யாவில் இறந்த இந்தியர் பினில் பாபுவின் மறைவு துரதிருஷ்டவசமானது. பினில் பாபவின் குடும்பத்தாருக்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் நமது தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

மேலும், போரில் மற்றொரு இந்தியர் காயமடைந்து மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை முடிந்ததும் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார். ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 126 இந்தியர்களில் 96 பேர் ஏற்கெனவே தாயகம் திரும்பிவிட்டனர். மீதமுள்ள 30 பேரில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். 16 பேரைக் காணவில்லை என்று ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை விரைவில் எங்களிடம் ஒப்படைக்குமாறு ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Readmore: பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமணம்!. பெண் எம்பியை மணக்கிறார்!. யார் அந்த பிரியா சரோஜ்?

Tags :
Advertisement