முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING: 12 மாவட்டங்களுக்கு புயல் 'ஹை' அலர்ட்.! அதிரடி நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின்.!

12:32 PM Dec 01, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலான கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் அவசரநிலை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி தடுப்பு நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார். புயல் தாக்கும் அபாயம் இருக்கும் 12 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக அந்த 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார் ஸ்டாலின். புயல் தாக்கும் மாவட்டங்களில் பொது மக்களுக்கு தங்கும் வசதி அவர்களுக்கு தேவையான உணவு வழங்குவதற்கான சமையல் கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புயல் காலத்தில் போக்குவரத்து வசதிகளை சீர் செய்வது தொடர்பாகவும் மழைநீர் தேங்காதவாறு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் படியும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்து செல்ல தினங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் எச்சரிக்கையும் விடப்பட்டிருப்பதால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

Tags :
12 districtscm stalinCollectorsStorm alertTamilnadu
Advertisement
Next Article