11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! இணையதளத்தில் பார்ப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. எனவே மாணவர்கள் ரிசல்டை எந்த இணையதளத்தில் எப்படி பார்க்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி நடந்து முடிந்தது. தற்போது இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகயுள்ளது. அண்மையில் 10 ஆம் மற்றும் 12 ஆம் தேதி வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிகள் வெளியானது. அதன்படி தற்போது இன்று காலை 9.30 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 11th Result) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
தேர்வு எழுதியவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி சரிப்பார்ப்பது? https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் tnresults.nic.in இணையதளத்தை தேடவும், அதில் 11ஆம் Exam Results May 2024 என்பதை அழுத்தவும். பிறகு
உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும். மேலும் உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Read More: எப்போ கல்யாணம்? – கூட்டத்தில் இருந்து வந்த பெண்ணின் குரல்.. வெட்கத்தோடு ராகுல் சொன்ன பதில்!