முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு 1,152 சிறப்பு பேருந்து இயக்கப்படும்...!

1,152 special buses will operate for 3 days starting today in view of the continuous holiday
06:18 AM Nov 15, 2024 IST | Vignesh
Advertisement

தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இன்று பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூருவுக்கு 81 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

Advertisement

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 350, கோயம்பேட்டில் இருந்து 11, மாதவரத்தில் இருந்து 5 பேருந்துகள் என மொத்தம் 1,152 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்தில் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கம் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennaiholidayspecial bustn government
Advertisement
Next Article