முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல்...!

112 kg of pseudo ephedrine tried to be smuggled to Australia seized in Chennai
05:28 PM Sep 27, 2024 IST | Vignesh
Advertisement

சென்னையில் ஏற்றுமதி செய்யப்படவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஏற்றுமதி செய்யப்படவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல் செய்துள்ளது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருந்த சரக்குப் பெட்டகம் ஒன்றை சென்னை துறைமுகத்தில் டி.ஆர்.ஐ இடைமறித்து சோதனை செய்தது. அந்த சரக்குப் பெட்டகத்தில் 450 மூட்டைகளில் தலா 50 கிலோ குவார்ட்ஸ் பவுடர் இருந்தது.

மேலும் மூட்டைகளை தனித்தனியாக பரிசோதித்ததில், மொத்தம் 450 மூட்டைகளில் 37 குவார்ட்ஸ் தூள் மூட்டைகளின் அடிப்பகுதியில், தலா 3 கிலோ சூடோ எபிட்ரின் கொண்ட 37 பாக்கெட்டுகள் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1985-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது, குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 3.9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூடோ எபிட்ரின் போதைப்பொருள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, மெத்தாம்பேட்டமைனின் சட்டவிரோத உற்பத்திக்கு முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
australiaChennaidrugsPolice
Advertisement
Next Article