For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்...! 11,12 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண்...!

06:50 AM Nov 26, 2023 IST | 1newsnationuser2
குட் நியூஸ்     11 12 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண்
Advertisement

11 மற்றும் 12 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்படும்.

பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் தருவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement