மூச்சுத்திணறி 11 தொழிலாளர்கள் உயிரிழப்பு!... நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் நிகழ்ந்த சோகம்!
Coal Mine Blast: பலுசிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவிற்கு வெளியே உள்ள சஞ்சாடி நிலக்கரிச் சுரங்கப் பகுதியில் நேற்றிரவில் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 11 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இவ்விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடக்கம் செய்வதற்காக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது என்று அதிகாரிகள் கூறினர். பாக்கிஸ்தானில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் போதிய பாதுகாப்புத் தரங்கள் இல்லாததால் விபத்துக்கள் மற்றும் வெடிப்புகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். உரிமையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவத் தவறியதாக சுரங்கத் தொழிலாளர்கள் அடிக்கடி புகார் கூறிவருகின்றனர்.
ஆபத்து மற்றும் குறைந்த ஊதியம் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் பலுசிஸ்தானில் வேலை செய்கிறார்கள், அங்கு நாட்டின் மற்ற பகுதிகளை விட வேலையின்மை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஸ்தம்பித்த பெங்களூரூ!… 133 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை!… ஒரேநாளில் 111 மி.மீ மழை பதிவு!