பரபரப்பு...! ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் நீக்கம்...!
மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது. இந்துக்கள் குறித்த பேச்சு, பாஜகவினர், பிரதமர் மோடி, சபாநாயகர் குறித்த பேச்சுகள் நீக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் மக்களவையில் பேசினார்.
நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக பேசினார். பாஜக இந்துக்கள் இல்லை எனக் கூறியதால் ராகுல் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. எனினும் அவையில் பல விஷயங்களை முன்வைத்தார். சிவன், குருநானக், ஜீசஸ் போன்ற கடவுள்கள் மற்றும் அபய் முத்திரை புகைப்படங்களை காண்பித்து பேசினார் ராகுல். தொடர்ந்து சில விஷயங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக சாடும் வகையில் பேசினார்.
அயோத்தி குறித்து பேசும்போது, மக்களவை தேர்தலில் அயோத்தியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி எம்.பி அவதேஷுக்கு அவையிலேயே கைகுலுக்கி பாராட்டினார் ராகுல் காந்தி. இந்த நிலையில் மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையிலிருந்து 11 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்துக்கள் குறித்த பேச்சு, பாஜகவினர், பிரதமர் மோடி, சபாநாயகர் குறித்த பேச்சுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.