முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூடு பிடிக்கும் 2024 தேர்தல்: காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைக்கோ கூட்டணி பேச்சு வார்த்தை...!

06:10 AM Feb 04, 2024 IST | 1newsnationuser2
Advertisement

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் மதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த ஜனவரி 28-ம் தேதி முடிந்தது.

Advertisement

நேற்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இன்று மதிமுகவுடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இதைத்தொடர்ந்து விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச திமுக திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிகவுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இம்முறை திமுகவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு, மதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது திமுக. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

Tags :
2024 electionAllianceDmkelectionvaiko
Advertisement
Next Article