முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

The Tamil Nadu government has ordered the appointment of vigilance officers in 11 districts including Chennai.
09:45 AM Aug 01, 2024 IST | Chella
Advertisement

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சி. விஜயராஜ்குமார் ஐஏஎஸ், திண்டுக்கலுக்கு பிரஜேந்திர நவிந்த் ஐஏஎஸ், சென்னைக்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ், திருவண்ணாமலைக்கு மதுமதி ஐஏஎஸ், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுந்தரவள்ளி ஐஏஎஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம் ஐஏஎஸ், தூத்துக்குடிக்கு வீரராகவ ராவ் ஐஏஎஸ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தர்மேந்திர பரிதமாப் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு வள்ளலார் ஐஏஎஸ், கோவை மாவட்டத்திற்கு நந்தகுமார் ஐஏஎஸ், நாகைக்கு மகேஸ்வரன் ஐஏஎஸ் ஆகியோர் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More : Gold Rate | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Tags :
Chennaiகண்காணிப்பு அலுவலர்கள்சென்னைதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article