முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Exam 2024: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 28-ம் தேதி வரை செய்முறை தேர்வு...!

05:59 AM Feb 26, 2024 IST | 1newsnationuser2
Advertisement

Practical Exam 2024: செய்முறை தேர்வுகள் இன்று முதல் 28-ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.

Advertisement

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட (Science Practical Examinations) செய்முறை தேர்வுகள் இன்று முதல் 28-ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வெழுதி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வை எழுதிட வேண்டும்.

அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அறிவிப்பை தெரிந்துகொண்டு, அறிவியல் பாட செய்முறை தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: 10th class students exam from today to 28th

Advertisement
Next Article