For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்றுமுதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி!… 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

05:40 AM Apr 12, 2024 IST | Kokila
இன்றுமுதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி … 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
Advertisement

Exam: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுமுதல் தொடங்க உள்ளது. தில் சுமார் 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Advertisement

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுமார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி அன்று முடிவடைந்தது. இத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்தநிலையில் இன்றுமுதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ஏப்ரல் 22-ம் தேதி வரை நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: தமிழகத்தை ரவுண்டு கட்டும் தேசிய தலைவர்கள்!… மோடியை தொடர்ந்து ராகுல்!… நெல்லையில் இன்று பிரசாரம்!

Advertisement