முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்..! இரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

08:12 AM Jan 09, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

தமிழகத்தில் சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து நள்ளிரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

Advertisement

வேலை நிறுத்தத்தில் பங்குபெறாதா தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவது நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 104.51% பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாகவும் சேலம் திருநெல்வேலி, ஆகிய கூட்டங்களில் இருந்து முழுமையாக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுரையில் கோட்டத்தில் 94.89%, கோவை 90.38%, கும்பகோணம் 93.34%, விழுப்புரம் கோட்டத்தில் 76.81% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையிலி காலை 5 மணி நிலவரப்படி 166.30% அளவுஊக்கு 1,071 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணாமாக கஞ்சியுபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது

Tags :
strike in tamilnadutn gov bustransport worker strike in tamilnaduவேலை நிறுத்தப் போராட்டம்
Advertisement
Next Article