வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000..!! பாஜக தொடர்ந்து கண்காணிக்கும்..!! அண்ணாமலை அதிரடி..!!
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் மழை நீர் வடிவதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்கின்றனர். அதன்பிறகும் மழை நீர் தேங்கி நிற்கிறது எனில், அந்த பணம் செலவு செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும், சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க மாநில அரசுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய மத்திய அரசும், பிரதமர் மோடியும் தயாராக உள்ளனர். மழை நிவாரண பணிக்கு 5 ஆயிரத்து 60 கோடி வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் கேட்டார்.
24 மணி நேரத்தில் தேசிய பேரிடர் நிதியில் இருந்து 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான 900 கோடி ரூபாயை 2 தவணைகளாக மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த தொகையை அரசு திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் தவறு ஏதும் நிகழாதபடி பாஜக கண்காணிக்கும். அதே நேரத்தில், மழைவெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீள வேண்டுமெனில், தமிழக அரசு அவர்களுக்கு நிவாரண தொகையாக குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.