அடி தூள்...! 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம்...!
ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம் பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார்.
ஒடிசா மாநில அரசு, தாய்மார்களுக்கு சுபத்ரா திட்டம் என்ற பரிசை வழங்கியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் மூலம் ஒடிசாவைச் சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மொத்தம் ரூ. 50,000 வழங்கப்படும் என்றும், அது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சுபத்ரா திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் 2024-25 முதல் 2028-29 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.50,000/- பெறுவார்கள். இரண்டு சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.10,000 / - பயனாளியின் ஆதார், நேரடிப் பயன் பரிமாற்றத்தால் இயக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த வரலாற்று தருணத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி மாற்றத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடமிருந்து ஒடிசா மாநிலம் நிதியுதவி பெற்றதை விட இம்முறை மூன்று மடங்கு நிதி அதிகமாக ஒடிசா மாநிலம் பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். இதுவரை செயல்படுத்தப்படாத நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆயுஷ்மான் திட்டம் குறித்து பேசிய பிரதமர், ஒடிசா மக்களும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை மூலம் பயனடைவார்கள் என்றும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ரூ. 5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.