For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இவர்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியம்..!! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Minister Shekharbabu has issued 108 new announcements including renovation works in various temples at an estimated cost of 210 crore rupees in Tamil Nadu.
01:06 PM Jun 27, 2024 IST | Chella
இவர்களுக்கு மாதம் ரூ 10 000 தொகுப்பூதியம்     அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 108 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அரசு சார் ஊழியர்களுக்கு என்று அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில்தான் நேற்று நிதி வசதியற்ற திருக்கோயில்களில் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு, ”210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு கால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி இந்தாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக தலா ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

பழனி அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஏற்கனவே காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவு வழங்கப்படும். நிதி வசதியற்ற திருக்கோயில்களில் ஏற்கனவே மிகக் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசை கலைஞர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். மேலும், 50 திருக்கோயில்களில் 100 இசைக்கலைஞர்கள் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Read More : புதிய தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.5 கோடி வரை கடன்..!! மானியமும் உண்டு..!!

Tags :
Advertisement