'ஈஷா அம்பானியின் ஒரு டிரஸ் தயாரிக்க 10,000 மணிநேரம்..' முகேஷ் அம்பானி மகள்னா சும்மாவா!!
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அணிந்திருந்த ஆடையை தயாரிக்க பத்தாயிரம் மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் காலா 2024 பேஷன் ஷோ நிகழ்ச்சியில் உலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஈஷா கலர்புல் உடையில் கலக்கலாக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அப்போது அவர் அணிந்திருந்த அந்த ஃப்ளோரல் கவுன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் ஈஷா அம்பானி அணிந்திருந்த ஆடையின் கருப்பொருள் "தி கார்டன் ஆஃப் டைம்" என்பதாகும். பலவகையான மலர்கள் பட்டாம்பூச்சிகள் மற்றும் டிராகன் ஈக்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈஷா அணிந்துள்ள கலர்புல் உடை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த உடையின் அழகு பார்ப்போரின் கண்ணைப்பறிக்கும் அளவுக்கு ஜொலிஜொலித்தது. இந்த உடையை தயாரிக்க சுமார் 10,000 மணிநேரம் ஆனதாக கூறுகின்றனர்.
பல விதமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த டிசைன் உடையை இந்தியாவின் பிரபல டிசைனர் ராகுல் மிஸ்ரா வடிவமைத்துள்ளார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். ராகுல் மிஸ்ரா டிசைன் செய்த உடையில், ஈஷா மெட் காலா 2024 பேஷன் ஷோவில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளார். அதேபோல் மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் முதல் முறையாக ஈஷா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் விதமாக ராகுல் மிஸ்ரா இந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பி பாரம்பரிய முறையில் இந்த எம்பிராய்டரி வேலைகளை செய்ததாக தெரிய வந்துள்ளது. நமது பூமி தற்போது உள்ள சூழலில் இருந்து மீண்டு திரும்ப எழுந்து வரும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பூமியின் நீடித்த தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த ஆடையினை ஈஷா அம்பானி தேர்வு செய்ததாக அவர் கூறியுள்ளார். இத்துடன் ஈஷா அம்பானி ஒரு பர்சையும் வைத்திருந்தார். இதுவும் பாரம்பரிய முறையில் இந்திய கிராமங்களில் தயாரிக்கப்பட்டதாம்.