வங்கிக் கணக்கில் மாணவர்களுக்கு ரூ.1,000..!! உயர்கல்விக்கு எதுவும் தடையாக இருக்காது..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். மாநிலம் முழுவதும் மொத்தம் 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய உள்ளனர்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், சுமார் 3.28 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வசதி குறைவால், உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இதனால், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “தமிழக மாணவர்களின் உயர்கல்விக்கு எதுவும் தடையாக இருக்காது என உறுதியளித்தார். பள்ளிக்கல்வி முடித்த அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயிலும்படி வலியுறுத்தினார். மேலும், தமிழக மாணவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட தாம் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
Read More : மாதாந்திர வருமான திட்டம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..? மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!