'1000 சவரன் வரதட்சணை கேட்டு அடிச்சாங்க’..!! ’ஓட்டு போட கூட விடல’..!! கதறும் ADMK முன்னாள் MLA-வின் மருமகள்..!!
கடந்த சில தினங்களாக உயர் பதவியில் வகிப்பவர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட வரதட்சணை கொடுமை குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது சோழிங்கநல்லூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கே.பி. கந்தனின் மருமகள்தான் அந்த புகாரை தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு 1,000 பவுன் வரதட்சணையாக கேட்ட நிலையில், எனது தந்தையால் 600 பவுன் மட்டுமே போட முடிந்தது. ஆனால், அந்த நகை போதவில்லை என கூறி தன்னை கொடுமைப்படுத்தியதாக மாஜி எம்எல்ஏ மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை கொடுத்துவிட்டு வெளியே வந்து பேட்டியளித்தார். அதில், ”எங்களது முதல் திருமண நாளன்று நான் 4 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அப்போது என்னை ஹோட்டலுக்கு உணவு சாப்பிட அழைத்துச் சென்றார். அங்கு எங்களுக்கு தாய் வீட்டிலிருந்து தங்க பரிசு ஏதும் கொடுக்கவில்லை என கூறி ஹோட்டலில் வைத்தே என்னை அடித்தார். என்னை பல முறை அடித்துள்ளார்.
பிறகு வீடியோ எடுத்து நான் வழுக்கி விழுந்துவிட்டதாக சொல்லு என என்னை கட்டாயப்படுத்துவார். இந்த விஷயங்கள் உன் அப்பாவுக்கு தெரியக் கூடாது என மிரட்ட தொடங்கினார். என் அப்பாவிடம் நான் சொல்லி அதை அவர் மாமனாரிடம் கேட்ட போது அவரும் என்னை மிரட்ட தொடங்கினார். இந்த டார்ச்சரை பொறுக்க முடியாமல் நான் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். அப்போது கூட அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே இல்லை. என் கணவரின் அக்கா ஒரு மருத்துவர் என்பதால் காயத்திற்கு மருந்து மட்டும் போட்டுவிட்டார். தையல் போடும் அளவுக்கு ஆழமாக கிழித்துக் கொண்ட போதிலும் அவர்கள் அதை செய்யவில்லை.
2021 ஆம் ஆண்டு மே மாதம் என்னையையும் என் குழந்தையையும் வீட்டை விட்டே அனுப்பிவிட்டார்கள். நகை இல்லாமல் வீட்டுக்குள் வராதே என கூறி என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் அப்பா நியாயம் கேட்ட போதும் கூட அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை. என்னையும் அவர்களது வீட்டிற்குள் சேர்க்கவே இல்லை. நடுவில் என் மாமனார் பிரச்சனையை சரி செய்வதாக கூறி என் கணவரை விட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
அந்த வீட்டில் இருந்த வரை 3 தேர்தல்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தல், எம்எல்ஏ தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய 3 தேர்தல்களுக்கும் என்னை ஓட்டு போடவே விடவில்லை. நகைக் கொடுக்கவில்லை, பணம் கொடுக்கவில்லை. உனக்கு ஓட்டு போட உரிமை கிடையாது எனக்கூறி என்னை அடைத்துவைத்தனர். ஒரு தேர்தலில் என் மாமனார் போட்டியிட்ட தொகுதியில் கூட என்னை வாக்களிக்க விடவில்லை. என் கணவர் போட்டியிட்ட கவுன்சிலர் தேர்தலிலும் என்னை வாக்களிக்க விடவில்லை. எனது புகாரை அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்கள். அங்கு எனது புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” என கூறியுள்ளனர்.
Read More : Vijay TVK | 2026 முதல்வர் பதவி உறுதி..? நடிகர் விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராகும் பிரஷாந்த் கிஷோர்..!!