For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்...! பள்ளி மாணவர்களுக்கு இனி 100 Mbps வேகத்தில் இணைய வசதி...! தமிழக அரசு அறிவிப்பு...!

06:20 AM May 09, 2024 IST | Vignesh
குட் நியூஸ்     பள்ளி மாணவர்களுக்கு இனி 100 mbps வேகத்தில் இணைய வசதி     தமிழக அரசு அறிவிப்பு
Advertisement

பள்ளிகளில் ஏற்கெனவே இருந்த இணைய வேகம் போதுமானதாக இல்லை என்பதால் அதை 100 Mbps என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் ; வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில்,தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது. இதை கருத்தில் கொண்டு, முதல்வரின் சீரிய முயற்சியால் அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும், 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46.13 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 6,023 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் வகையில் பாடப் பொருட்கள் அனைத்தும் காணொலி வாயிலாக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகசெயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மாணவர் களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.

இப்பணிகளுக்கு, பள்ளிகளில் ஏற்கெனவே இருந்த இணைய வேகம் போதுமானதாக இல்லை என்பதால் அதை 100 Mbps என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொலி வாயிலாக கற்பது, உயர்கல்வி வழிகாட்டுதல் பெறுவது ஆகியவற்றுக்கு வழி ஏற்படும். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement