For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் 100% மழை குறைவு..! வறண்ட வீராணம் ஏரி… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா…! குறைந்து வரும் ஏரிகள்… நிலைமை என்ன..!

01:01 PM Apr 27, 2024 IST | Kathir
சென்னையில் 100  மழை குறைவு    வறண்ட வீராணம் ஏரி… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா…  குறைந்து வரும் ஏரிகள்… நிலைமை என்ன
Advertisement

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் ஆகிய ஆறு ஏரிகள் சென்னையின் நீர் ஆதாரமாக உள்ளது. சென்னையில் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் சென்னையின் நீர் அதரங்களில் நீர் மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.

Advertisement

ஏப்ரல் 26ஆம் தேதி நிலவரப்படி புழல் ஏரியின்(மொத்த உயரம் 21.20 அடி) நீர் மட்டம் 19.59 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 மில்லயின் கன அடி, அதில் நீர் இருப்பு 2,930 மில்லயின் கன அடியாக உள்ளது. நீர் வரத்து 595 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 216 கன அடியாகவும் உள்ளது.

அதே போல் சோழவரம் ஏரியின் நீர் மட்டம் 2.96அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 1,080 மில்லயின் கன அடி, அதில் நீர் இருப்பு 130 மில்லயின் கன அடியாக உள்ளது. நீர் வரத்து எதுவும் இல்லையென்றாலும், 208 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 19.11அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லயின் கன அடி, அதில் நீர் இருப்பு 2,389 மில்லயின் கன அடியாக உள்ளது. நீர் வரத்து எதுவும் இல்லையென்றாலும், 11 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

பூண்டி ஏரியின் நீர் மட்டம் 26.21 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 3,231 மில்லயின் கன அடி, அதில் நீர் இருப்பு 1,020 மில்லயின் கன அடியாக உள்ளது. நீர் வரத்து எதுவும் இல்லையென்றாலும், 523 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

15 அடி கொண்ட வீராணம் ஏரியில் நீர் மட்டமே இல்லை, வறண்டு காணப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கத்தில், நீர் மட்டம் 33.06 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 500 மில்லயின் கன அடி, அதில் நீர் இருப்பு 386 மில்லயின் கன அடியாக உள்ளது. நீர் வரத்து எதுவும் இல்லையென்றாலும், 25 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

சென்னையின் குடிநீர் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டி.எம்.சி. ஆனால் ஏற்கனவே வீராணம் ஏரி முழுவதுமாக வறண்டு போன நிலையில், மற்ற ஏரிகளின் நீர்த்தேக்கம் தற்போது 6.88 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

சென்னையில் 1.5 செ.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், மழையே பதிவாகவில்லை. இதனால் சென்னையில் 100 விழுக்காடு மழை குறைந்துள்ளது. சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 100% மழை குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஏரியின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், இனி வரும் வறட்சி காலங்களில் இந்த நீரை வைத்து சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியுமா என்றால் இல்லை என்று கூறும் அளவுக்கு உண்மை இருக்கிறது.

Tags :
Advertisement