For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

100 நாள் வேலை திட்டம்!… சம்பளம் கிடைக்காது!… அமலுக்கு வந்தது புதிய நடைமுறைகள்!

09:45 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
100 நாள் வேலை திட்டம் … சம்பளம் கிடைக்காது … அமலுக்கு வந்தது புதிய நடைமுறைகள்
Advertisement

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பணிபுரிபவர்களின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் டிச.31ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

Advertisement

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 100 நாட்கள் வேலை வழங்கப்படுகின்றது. அதற்கான ஊதியம் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் அதில் பல்வேறு வகையான மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. மேலும் மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்ட பணி செய்ய பயன்படுத்தும் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்த நிலையில் இறுதி கட்ட கால அவகாசம் டிசம்பர் 31, 2023 தேதியுடன் முடிவடைந்தது. இந்த நடைமுறைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் கூறப்பட்ட நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நாள் வேலை பார்த்து இருந்தாலே அவர்களின் பணியில் இருக்கும் தொழிலாளர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அட்டையில் ஒரு நாள் கூட பதிவு செய்யாமல் இருப்பவர்களை தகுதியான முறையில் தேர்ந்தெடுத்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஆதார் கார்டு வங்கி கணக்குடன் இணைந்து இருப்பதால் பணம் பட்டுவாடா செய்வதில் மோசடி எதுவும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர். அதனால் ஆதார் அட்டையை பணியாளர் அட்டையுடன் இணைப்பதின் மூலம் சம்பளம் வழங்கப்படும் என்ற திட்டம் நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், இது நாள்வரையில், 2,02,782 பேர் AEPS முறையின் கீழ் இணைக்கப்படாமல் உள்ளனர். மாநிலத்தில் உள்ள 9, 217,339 திட்ட பயனாளர்களில் (Actieve Workers), 9019143 பேர் ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் (AEPS) கீழ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தேசிய அளவில் 1.5 கோடிக்கும் அதிகமானோர் AEPS முறையின் கீழ் வரவில்லை என்று சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement