’உங்கள் பெயரை நீக்கிட்டாங்க’..!! ’உடனே செக் பண்ணிக்கோங்க’..!! 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் அதிர்ச்சி..!!
100 நாள் வேலைத்திட்டத்தில் இருந்து 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலை திட்டம் நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது. முறையான சம்பளம் இல்லை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்று மக்கள் புலம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை பார்க்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக பீகாரில் 4,56,004 பேரும், சத்தீஸ்கரில் 3,36,375 பயனாளிகளும் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் இருந்து 8 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2022-23 நிதியாண்டில் 20.47 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு நீக்கம் இது.
Read More : காற்று வீசுவதில் மாறுபாடு..!! தமிழ்நாட்டிற்கு கைகொடுக்காத மழை..!! என்ன காரணம்..?