முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

100 நாள் செயல்திட்டம்... அதிகாரிகளுக்கு மத்திய விவசாய அமைச்சர் பிறப்பித்த உத்தரவு...!

100 Day Action Plan... Union Agriculture Minister's order to officials
07:00 AM Jun 13, 2024 IST | Vignesh
Advertisement

மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தின் 100 நாள் செயல்திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் உறுதிப்பாட்டின்படி பணிகள் விரைந்து நடைபெறும் வகையில், விவசாயிகள் சார்ந்த பணிகளில் அதிகாரிகள் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement

நாட்டின் வேளாண் துறையை வலுப்படுத்தவும், விவசாயிகளின் பிரச்சனைகளை களையவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்கு தரமான உரங்கள், விதைகள், பிற இடுபொருட்கள் கிடைப்பதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இது தொடர்பாக விவசாயிகள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக்கூடாது என்றும், இது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர, உலகின் பிற நாடுகளுக்கு அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப தரமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய உறுதியான திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags :
central govtfarmersshivraj singh chauhan
Advertisement
Next Article