அதிர்ச்சி!! பள்ளி வேனில் வந்த 10 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது கிளீனர்...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், 72 வயதான வேன் கிளீனர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவில் உள்ள சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் 72 வயதான திருப்பதி. இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் வேன் கிளீனராக வேலை செய்து வருகிறார். பல்வேறு இடங்களில் இருந்து, மாணவ மாணவிகள் இந்த வேனில் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில், இந்த வேனில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இந்த சிறுமிக்கு கடந்த சில மாதங்களாகவே திருப்பதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சிறுமி, ஒரு கட்டத்தில் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பெற்றோருடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற சிறுமி, தனக்கு நடந்ததை எல்லாம் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்த மகளிர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்துள்ளனர்.